மட். கல்குடா,கறுவாக்கேணி விக்னேஸ்வரா கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் ‘விருதாளர் விழா நிகழ்வு நேற்று (16) வெகு சிறப்பாக கல்லூரி மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத் தலைவரான அதிபர் சு.அன்ரனி நிக்லஸ் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் கல்வி,கலை, கலாச்சாரம்,விளையாட்டு திறன்களை விருத்தியடையச் செய்வதற்கு முன்னுதாரமான ஒரு செயற்பாடாக இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் அனைவரும் மலர்மாலை அணிவித்து தமிழ் கலாச்சார பாரம்பரிய இசையுடன் ஊர்வலமாக கல்லூரிக்குள் அழைத்து வரப்பட்டனர்.
தேசியக் கொடி மற்றும் கல்லூரி கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் மற்றும் கல்லூரி கீதம் என்பன இசைக்கப்பட்டடு அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் விருதாளர் விழா நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.
இதன்போது புதிய அதிபர் அன்ரனி நிக்கிளஸ், கற்பித்த மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவித்து விருது வழங்கப்பட்டது.
முன்னாள் அதிபர் சா.சுதாகரன் பாடசாலைக்கு ஆற்றிய சேவைக்காக பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.பாடசாலை பழைய மாணவனும் போதகருமான கு.லக்ஸ்மனக்காந்த் விருது வழங்கி கௌரவிக்க்ப்பட்டார்.இதேபோன்று பாடசாலை மட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த மாணவ மணவிகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியில் இன்று நடைபெறவுள்ள (17) கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள பழைய மாணவர்களை உள்ளடக்கியதான 3 நாள் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கான வெற்றிக் கிண்ணம் வைபவ ரீதியாக அறிமுகம் செய்யப்பட்டது.