அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, குறைக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி – 200 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 215 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி – 247 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது..
”அத்துடன், ஒரு கிலோ பருப்பு – 278 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை – 441 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் – 785 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு கௌப்பி – 90 ரூபாவாகவும், ஒரு கிலோ பாசிப்பயறு – 92 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.