மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன பஞ்சகுண்டபட்ச மஹா கும்பாபிசேகம் நேற்று19) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த 17ஆம் திகதி கும்பாபிஷேக கிரியைகளுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் நேற்றுமுன்தினம் அடியார்கள் பத்திரக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தன.
நேற்றைய தினம் புண்ணியாகவாசனம், யாகபூஜை, ஹோமம், மஹா பூரணாகுதி நடைபெற்று வேததோஸ்திரம், நாதகீதாஞ்சலி, திருமுறை பாராயணம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன.
இதன்போது பரிபாலன ஆலயங்கள் மற்றும் மூல ஆலயங்கள் பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டதுடன் மூலமூர்த்தியாக அடையளில் அமர்ந்துள்ள வடபத்திரகாளியம்மனுக்கு பிரதான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து விசேட பூஜைகள் மற்றும் விசேடக அபிசேக பூஜைகள் நடைபெற்றுதுடன் விசேட அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.
ஆலயத்தில் தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்று எதிர்வரும் 30ஆம் திகதி சங்காபிசேகமும் நடைபெறவுள்ளது.
இவ் கும்பாபிஷேக நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.