இரத்தினபுரி, கலவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகரங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.
கலவானை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.