ஒரு கஜமுத்து, 10 சிறிய மாணிக்க கற்கள் மற்றும் 263 பழைய நாணயங்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்ற மூவரை தங்காலை நகரில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் காலி நெலுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், சட்டவிரோத செயற்பாடுகளுக்காக தங்காலை நகருக்கு வந்து அங்கு சுற்றித் திரிந்த போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் காலி நாகொட பிரதேசத்தை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்