மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர்பிரிவுக்குட்பட்ட பொண்டுகள் சேனை பிரதான வீதியில் வைத்து காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிரான் புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த தம்பிபிள்ளை அம்பிகை ராசா என்ற (வயது 60) மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டில் இருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு நேற்று முன்தினம் ( 19) திங்கள் கிழமை அதிகாலை துவிச்சக்கர வண்டிலில் சென்ற வேளையில் பனை மரத்தின் மறைவில் நின்ற காட்டு யானை தாக்கியததில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில் கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதிக்குரிய திடீர் மரண விசாரணை அதிகாரி கே.பவளகேசன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், விசாரணைகளை மேற்கொண்டார்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார் வைத்தி சாலைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டதுடன், நேற்று (20) செவ்வாய் கிழமை சடலம் மீதான சட்ட வைத்திய பரிசோதனை நிறைவடைந்த பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
அதேசமயம் குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இம் மாதமளவில் மட்டும் 2 குடும்பஸ்த்தர்கள் காட்டு யதனையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.