ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விதிக்கப்பட்டிருந்த 100 மில்லியன் நட்ட ஈடு தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் போதியளவு உளவுத் தகவல்கள் கிடைத்தும் அதனை தடுக்க தவறியதாக முன்னாள் மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாவை அவர் கடந்த வெள்ளிக்கிழமை (16)அன்று செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் ஆகியோருக்கும் உரிய நட்டஈடு தொகையை செலுத்தி முடித்துள்ளனர்.
எனினும், முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் இதுவரை நட்டஈடு செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.