லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
இதனால், இறக்குமதி செய்யப்படும் 425 கிராம் எடையுள்ள மீன் டின் ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 500 ரூபாவாகும்.
அத்துடன், உள்ளூர் 425 கிராம் மீன் டின் ஒன்றின் விலை 450 ரூபாவாகவும், 155 கிராம் மீன் டின் ஒன்றின் விலை 270 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிலோ பயிறு விலை 890 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 470 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
வெள்ளை சீனி மற்றும் காய்ந்த மிளகாய் கிலோ ஒன்றின் விலையும் 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், நெத்தலி விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 925 ரூபாவாகும்.
ஒரு கிலோ உள்ளூர் சம்பாவின் விலையை 226 ரூபாவாகவும் ஒரு கிலோ கொண்டைக்கடலையின் விலையை 439 ரூபாவாகவும் குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.