நாடாளுமன்ற பாதீட்டு அலுவலக யோசனை, திருத்தங்களுடன் நேற்று (20.06.2023) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இந்த யோசனை விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக பொது நிதிக்கான குழு, நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகத்தை நிறுவுவதற்கான யோசனைக்கு திருத்தத்துடன் ஒப்புதல் அளித்திருந்த இந்த சட்டம் அமுலாக்கம் கால தாமதமாகிவிட்டதாகவும், இது அலுவலகம், பகுப்பாய்வு செயல்பாட்டில் மிகவும் தேவையான சுதந்திரத்தை புகுத்துவதாகவும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களுடைய சொந்தக் கட்சியின் பொருளாதார அறிக்கைகளை சுதந்திரமான பகுப்பாய்விற்காக பாதீட்டு அலுவலகத்திற்கு அனுப்புவதற்கான ஒரு புதிய விதியை இந்த சட்டம் கொண்டுள்ளது.
அத்துடன் முன்மொழியப்பட்ட யோசனைகளை பகுப்பாய்வு செய்ய நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சுயாதீனமான நிறுவனமாகவும் நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.