திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிச்சேனை பகுதியில் 20வயதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (25) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அண்மையில் திருமணமான வெருகல் மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஒருவரே இவ்வாறு வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.