அவசர சேவையில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள, இணையத்தினூடாக முன்பதிவு செய்து, கொழுப்பு பத்தரமுல்ல அலுவலகத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள சென்ற பொது மகன் ஒருவரினால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டடுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பிலிருந்து கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக குறித்த பொது மகன் ஒருவர் இணையம் மூலமாக விண்ணப்பித்துள்ளார். குறித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளமானது இவர் சமர்ப்பித்த அடையாள அட்டை உட்பட அணைந்து ஆவணங்களையும் ஏற்றுள்ளது.
அவசர சேவையினூடாக விண்ணப்பித்து, 15000 ரூபாயை ஒன்லைன் ஊடாக செலுத்திய இவருக்கு 23 நாட்கள் கடந்தூதான் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு சென்று ஆவணங்கள், கை விரல் ரேகை ஆகியவற்றை வழங்க அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் குறித்த திகதியில் அலுவலகத்திற்கு கைவிரல் அடையாளத்தை வழங்க சென்றுள்ளார் பொதுமகன்.
அங்கு சென்று அனைத்து ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்த வேளை, உங்கள் அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ளமுடியாது அதனால் கைவிரல் அடையாளத்தை வழங்க அனுமதியில்லை என்று அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
பொதுமகனும், ஏன் என்னுடைய அடையாள அட்டையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறுகிறீர்கள், உங்கள் உத்தியோகபூர்வ இணையத்தளம் அவ்வாறு எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரிவிக்கவுமில்லை, மாறாக அது என்னுடைய ஆவணங்களை ஏற்றுக்கொண்டு விட்டதே பிறகு என்ன பிரச்சனை என்று வினவியுள்ளார்.
அது ஏற்றுக்கொண்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதில் இருப்பது உங்கள் பழைய புகைப்படம் புதிய புகைப்படத்துடன் இருக்கும், அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு வாருங்கள் என்று அவர்கள் கூறியதுடன், நாங்கள் இப்பொது பயன்படுத்தும் இணையத்தளம் புதுப்பிக்கப்படவில்லை அதனால் எங்கள் இணையத்தில் காண்பிப்பது போல் அவசர சேவையினூடாக விண்ணபிக்க 15,000 இல்லை அது 20,000 அதனால் வரும் பொது மீதி 5000 பணத்தையும் எடுத்து வாருங்கள் என்று அதிகாரி கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த பொதுமகன், நான் மட்டக்களப்பிலிருந்து வருகிறேன். உங்களுடைய இணையத் தளத்தில் இதை பற்றி தெரிவிக்கப்படவும் இல்லை, நான் ஆவணக்கள் சமர்ப்பிக்கும் போது அது மறுக்கவும் இல்லை, மாறாக அதை உங்களிடம் கேட்டால் இணையதளத்திற்கும், உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என் என்பது போல பதில் வழங்குகின்றீர்கள், நான் விண்ணப்பித்து 23 நாட்கள் ஆகிறது இதற்கு இடைப்பட்ட கால இடைவெளிக்குள் நீங்கள் இதை தெரிவித்ததாவது இருந்திருக்கலாம், என்னுடைய நேரத்தை வீண் விரயமாக்குவதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு அங்கு இருந்து வெளியேறியதாக அவர் தெரிவித்தார்.
அதேசமயம் அன்றையதினம் இந்த பிரச்சனையை போல, வேறு மாவட்டங்களிலிருந்து கடவுச்சீட்டு பெற்றுகொள்ள வந்த சிலரும் இதே போல திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கவலை தெரிவித்த அவர், முகவர்களினூடாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் ஒருவர் மேலதிகமாக 25,000 ரூபாய் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்தால் இது போன்ற எந்த பிரச்சனையும் அவர்களின் கண்களுக்கு தெரியாது என்றும் ஆனால் தற்போது இந்த முறைதான் இலகுவாக கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் நடைமுறையாக பத்தரமுல்ல அலுவலகத்தில் காணப்படுவதாகவும் விசனம் தெரிவித்தார்.