படைவீரர்களின் கோரிக்கைக்கமைய கூப்பன் அட்டை கொடுப்பனவை ஜனவரி மாதம் முதல் அனைத்து முப்படை வீரர்களுக்கும் பணமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற செய்தியாளர் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
முப்படைகளின் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் இருக்கும் வீர்ரகளுக்கு அரசாங்கம் கூப்பன் அட்டை கொடுப்பனவு வழங்கி வருகிறது. இந்த கொடுப்பனவு சில அதிகாரிகளுக்கு மூன்றுவேளை உணவாகவும் மேலும் சிலருக்கு அவர்களின் சம்பளத்துடன் இணைத்து பணமாகவும் வழங்கப்படுகிறது. இதற்காக அரசாங்கம் பாரியதொரு தொகையை ஒதுக்கி வருகிறது. இ்வ்வாறான கூப்பன் அட்டை கொடுப்பனவு வெளிநாடுகளில் பணமாக வழங்குவதையும் எங்களுக்கு அறிந்துகொள்ள கிடைக்கிறது.
யுத்தக்காலத்தில் படையினருக்கு இந்த கொடுப்பனவு உணவாக மாத்திரமே வழங்க முடியுமாகி இருந்தது. அவர்களுக்கு தேவையான போஷாக்கு யுத்த முகாம்களிலேயே வழங்கப்பட்டது. என்றாலும் தற்போது யுத்த நிலைமை இல்லாததால் அந்த நிவாரணத்தை அவர்களுக்கு வழங்கி வருகிறாேர். அதன் பிரகாரம் முப்படைகளின் அதிகாரி ஒருவருக்கு நாள் ஒன்றுக்காக 1161.56 சதமும் ஏனைய தரத்தில் இருக்கும் வீரர்களுக்கு நாளாந்தம் 967.53சதம் அவர்களினட உணவுக்காக ஒதுக்கி இருக்கிறோம்.
என்றாலும் ஜனவரி மாதம் முதல் அனைத்து முப்படை வீரர்களுக்கும் இந்த கூப்பன் அட்டை கொடுப்பனவை பணமாக வழங்க தீர்மானித்திருக்கிறோம். நாள் ஒன்றுக்கு 3 வேளை உணவுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டு, இதனை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். உயர் அதிகாரிகள் அல்லாத வேறு தரங்களில் இருக்கும் படைவீரர்களின் கோரிக்கைக்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவ வீரர்களுக்கு மாத்திரம் வருடாந்தம் இந்த கூப்பன் நடவடிக்கைக்காக 33பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. அதன்போது பல்வேறு முறைகேடான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் தற்போது இந்த பணத்தை முப்படையினருக்கும் பணமாக அவர்களின் கைகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களும் திருப்தியடைவார்கள். மோசடிகளுக்கும் இடம் இல்லாமல் போகிறது. எனவே ஜனவரி மாதம் முதல் நாட்டில் இருக்கும் அனைத்து முப்படை வீரர்களுக்கும் இந்த கூப்பன் அட்டை கொடுப்பனவை பணமாக அவர்களின் கைகளுக்கு வழங்க முடியுமாகும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.