கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தேவதாஸ் கனகசபை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
குறித்த அரசியல் கைதியான தேவதாஸ் கணகசபை இன்றையதினம்(23.06.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கடந்த 2008 ஆண்டு கைது செய்யப்பட்டு அரசியல் கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தேவதாஸ் கணகசபையை விடுதலை செய்யுமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது