மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் லயன்முறைமையினை புதிய கிராமங்களாக மாற்றி சொந்தமான காணிகளை வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (31) பண்டாரவளையில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
அன்று நாங்கள் வாக்குறுதி அளித்ததைப்போல் சம்பளத்தை அதிகரித்து கொடுத்தோம் அநேகமானோர் கூறினார்கள் சம்பளம் அதிகரிக்கப்படவில்லையென, சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் சட்டம் ஒன்றை அமுல்படுத்தி சம்பளத்தை அதிகரிப்பேன் என கூறினேன் அன்று சொன்னதைப்போல் சம்பளத்தை அதிகரித்தேன்.
அஸ்வேசும கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அஸ்வெசுமவினை வழங்க அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து கொண்டிருக்கின்றோம் .
இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை அதிகரித்து கொண்டு போகின்றமையால் எதிர்வரும் காலங்களில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம்.
அரசவேலைவாய்பு தனியார் வேலைவாய்பு பயிற்சிகளை வழங்கி நிரந்தரமாக்குவது மற்றும் நவீன முறையில் இளைஞர் யுவதிகளுக்கு விவசாயதுறையில் சிறந்த இலாபத்தினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்துவோம்.
ஒரு இலட்சத்துக்கு மேலாகவும் தற்போது பயிற்சினை பெற்றுக்கொண்டு இருப்பவர்களுக்கு மேலும் 50ஆயிரம் பேருக்கு நிதியுதவிகளை வழங்குவோம். தமக்கு பிடித்த அரசாங்கத்தோடு தனியார் நிறுவனத்தில் பயிற்சியினை பெற்றுக்கொண்டு தொழிலை பெற்றுக்கொள்ள நிதியுதவிகளையும் வழங்குவோம் என சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
சஜித் பிரேமேதாச என்ன கூறுகிறார் தொழில் குறித்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை இவர்களுக்காக வாக்களிக்க போகிறீர்கள் விவசாய துறையினை நவீனமுறையில் முன்னெடுத்துச்செல்லவும் தொழில் வாய்ப்பை அதிகரித்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகரிக்க இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதன் ஊடாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 25இலட்சம் முதல் 50இலட்சம் வரை அதிகரிக்க முடியும் இரண்டு வருடங்கள் செல்லும் போது சுற்றுலா பணிகள் செல்ல வீதிகள் பற்றாக்குறையாக காணப்படும் என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் சுயட்சை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணிலுடன் நாட்டை வெற்றிக்கொள்ளும் மக்கள் பேரணியில் இராஜாங்க தொழில் அமைச்சர் வடிவேல் சுரேஷ் முன்னாள் அமைச்சர் ஹரீன்பெர்னாண்டோ, அமைச்சர் நிமால் ஸ்ரீபாலடி சில்வா, நீதி அமைச்சர் அலி சப்ரி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் சாமர சம்பத், மற்றும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.