புத்தளம் கற்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது, நேற்று(1) இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகிக்கப்படுவதாகப் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி, நேற்றைய தினம் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை மேற்பார்வை செய்ததுடன் அங்கிருந்து எரிபொருள் மாதிரிகளைப் பரிசோதனைக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.