புத்தளம், கட்பிட்டி, பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 1 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்பிட்டி மற்றும் சின்னக்குடியிருப்பு பகுதியில் வைத்தே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஒரு சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கெப் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 800 கிராம் கேரள கஞ்சா முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வாகன உரிமையாளரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மேலும் 200 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது 56 வயதுடைய வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்பிட்டி , சின்னக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பிலான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கேரள கஞ்சா, வாகனம் மற்றும் சந்தேகநபரை கட்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.