Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு, கிழக்கில் தொழுநோய் பாதிப்பு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை!

வடக்கு, கிழக்கில் தொழுநோய் பாதிப்பு; ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை!

2 years ago
in செய்திகள்

ஒரு முக்கியமான பிரச்சினையான தொழுநோய் குறித்து கருத்துரைக்க இருக்கிறேன்.

இந்த நோயைப் பெரும்பாலும் குணப்படுத்த முடியுமாக இருப்பினும், இலங்கையின் சில பகுதிகளில் இன்றுவரை கவலைக்குரிய நிலைமை காணப்படுகிறது.

அனைத்து இலங்கையர்களின் ஆரோக்கியத்தையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு, இந்த சவாலை அவசரமாகவும் பசிவோடும் எதிர்கொள்ள எம்மைத் தூண்டுகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களுக்கான அதிரடி அறிவிப்பு

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் சுமார் 1,550 பெரியவர்களும் 173 குழந்தைகளும் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மைய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த எச்சரிக்கை ஏற்படுத்தும் புள்ளிவிவரம். ஒரு வலிமையான மற்றும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

தொழுநோய் மக்கள் சங்கம், தொழுநோய் எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் பல்வேறு சுகாதாரத் துறைகள் உள்ளிட்ட அர்ப்பணிப்புள்ள அமைப்புகளுடன் இணைந்து, இந்த தொழுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த ஒத்துழைப்பு முயற்சிகள் விழிப்புணர்வு அதிகரிப்பு, முன்கூட்டிய நோய் கண்டறிதல் மேம்பாடு, பாதிக்கப்பட்டோருக்கு உகந்த சிகிச்சையை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டது.

தொழுநோயைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலமும், அதன் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், சமூக நலத் திட்டங்களில் பங்கேற்பதன் மூலமும் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஒவ்வொரு குடிமகனையும் நான் அழைக்கிறேன். பாதிக்கப்படுவோர், பயம் அல்லது பாகுபாடின்றி உதவியை நாடக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, இந்நோய் பற்றிய தவறான புரிதல்களையும், களங்கத்தையும் அகற்றுவதை மிகவும் முக்கியமாகக் கருதுகிறோம்.

ஒன்றுபட்டு, தொழுநோயை அனுதாபத்துடனும் செயற்பாட்டுடனும் எதிர்கொள்வதற்கான நமது தீர்மானத்தை வலுப்படுத்துவோம். தனிநபர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் ஒரு நோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாதது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanewsvadakilakkuவடகிழக்கு

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ
செய்திகள்

கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ

July 24, 2026
சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

July 24, 2026
குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!
செய்திகள்

குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!

July 24, 2026
துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது
செய்திகள்

துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது

July 24, 2026
தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!
செய்திகள்

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!

July 24, 2026
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

July 24, 2026
Next Post
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு