Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.09 மணியளவில் நீர்கொழும்பு, கம்பளை, பிபிலை மற்றும் அக்கரைப்பற்று போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை மன்னார், புத்தளம் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள். ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 – 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!
செய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!

October 28, 2026
தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!
செய்திகள்

தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!

October 28, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

October 28, 2026
ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!
செய்திகள்

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

October 28, 2026
ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!
உலக செய்திகள்

ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!

October 28, 2026
பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!
செய்திகள்

பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!

October 28, 2026
Next Post
மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்!

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.