ஆப்பிள் (Apple) போன்களின் ஐபோன் 6 சீரிஸ் (iPhone 6 Series), ஐபோன் 7 சீரிஸ் (iPhone 7 Series), ஐபோன் 8 சீரிஸ் (iPhone 8 Series) ஆகியவற்றின் யூசர்களுக்கு இந்திய மத்திய அரசின் சிஇஆர்டி (CERT) திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பழைய மாடல் போன்களை (Apple Old Model Phones) 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப்பிள் போன்கள் (Apple Phones), சைபர் தாக்குதல்களுக்கு எதிரான செக்யூரிட்டிக்கு, மிகுந்த பெயர்பெற்றவை என்பதால், இன்றளவும் அவற்றிற்கான மவுசு குறையவில்லை.
இந்த போன்களில் பயன்படுத்தப்படும் ஐஓஎஸ் (iOS) அவ்வளவு தரமான ஃபயர்வால் கொண்டதாக இருக்கும். ஆனால், தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி காரணமாக பழைய ஐபோன்களின் ஐஓஎஸ் பாதுகாப்பற்ற நிலைக்கு சென்றுள்ளது. இதனால், ஆப்பிள் நிறுவனம், அந்த போன்களுக்கான அப்டேட்களை அடிக்கடி கொடுத்து சரிசெய்து வருகிறது. இருப்பினும், பழைய மாடல்களை ஒழித்துவிட்டு, புது மாடல்களை விற்பனை செய்வதிலேயே, அந்த நிறுவனம் மும்முரம் காட்டி வருவது , அதன் சமீபத்திய நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.
இந்த நேரத்தில், காஸ்பர்ஸ்கி (Kaspersky) என்னும் சைபர் செக்யூரிட்டி நிறுவனம், பழைய ஆப்பிள் மாடல்களிலும், ஐபாட்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள ஐஓஎஸ், ஐபாட்ஓஸ் ஹேக்கிங் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. பழைய மாடல்களை ஒழிக்க சைபர் கும்பல்கள் மிகப்பெரும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது என்று பல்வேறு நாட்டு அரசாங்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசர கால நடவடிக்கைக் குழு (Computer Emergency Response Team), இந்தியாவில், ஆப்பிள் போன்களின் ஐபோன் 6 சீரிஸ், ஐபோன் 7 சீரிஸ், ஐபோன் 8 சீரிஸ் மற்றும் ஐபாட் ஏர் (iPad Air), ஐபாட் ப்ரோ (iPad Pro), ஐபாட் மினி (iPad Mini) ஆகியவற்றை பயன்படுத்தும் யூசர்களுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்தது.
மேற்கூறிய போன்களையும், ஐபாட்களையும் பயன்படுத்தும் யூசர்கள், உடனடியாக ஐஓஎஸ் 15.7.7 ( iOS 15.7.7) மற்றும் ஐபாட்ஓஎஸ் 15.7.7 (iPadOS 15.7.7) ஆகியவற்றை அப்டேட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கேற்ப ஆப்பிள் நிறுவனமும் அந்தந்த மாடல்களுக்கான அப்டேட்களை வழங்கிவருகிறது. இந்த அப்டேட்கள் வரும் அனைத்து ஆப்பிள் டிவைஸ்களையும் அப்டேட் செய்வது நல்லது. இதுவொருபுறம் இருக்க, பழைய மாடல்களை அப்டேட் செய்த பின்பு, போன்களின் பேட்டரி திறன் குறைகிறது. அதேபோல இன்டர்நெட் வசதி பழைய மாதிரி சிறப்பாக செயல்படுவது கிடையாது என்று பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதனால், பழைய ஆப்பிள் மாடல்களை பயன்படுத்தும் யூசர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர்.