சமீபத்தில் ட்விட்டர் யூசர் ஒருவர் ரியல்மி ஸ்மார்ட்போன் பற்றிய அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ரியல்மி ஸ்மார்ட்போனில் இருக்கும் “என்ஹான்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீசஸ்” எனப்படும் வசதியின் மூலம் அந்த யூசரின் டிவைஸ் பற்றிய தகவல்கள் மற்றும் அவரது தனிப்பட்ட தகவல்கள், அழைப்புகளின் விவரங்கள், எஸ் எம் எஸ், இருப்பிடத்தின் விவரம் போன்ற பல விவரங்களையும் திருடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷி பக்ரி என பெயர் கொண்ட அந்த ட்விட்டர் யூசர் இட்ட பதிவில் “ரியல்மி ஸ்மார்ட்போனில் இருக்கும் என்ஹான்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீசஸ் எனப்படும் இந்த வசதியானது ஒரு யூசரின் அனைத்து வித டேட்டாக்களையும் வேவு பார்த்து வருகிறது. மேலும் இந்த வசதி எப்பொழுதும் ஆன் செய்யப்பட்டே இருக்கும். இதை கண்டறிய வேண்டுமெனில் நீங்கள் செட்டிங்கிற்கு சென்று அடிஷனல் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து சிஸ்டம் சர்வீஸஸ் என்பதனை கிளிக் செய்து அதில் என்ஹான்ஸ்டு சர்வீசஸ் என்ற ஆப்ஷனை பார்த்தால் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு வசதி உங்களது ஃபோனில் இருப்பது உங்களுக்கு தெரிய வரும்.
இது யூசர்களின் அனுமதியின்றி ஆரம்பம் முதலே ON / Enable செய்யப்பட்டிருப்பதால் கிட்டத்தட்ட அவர்களின் அனுமதியின்றி தகவல்களை திருடுவதற்கு சமமாகும். இந்த தகவல்கள் அனைத்தும் சீனாவிற்கு அனுப்பப்படுகிறதா?” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த யூசரின் ட்வீட்டானது மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகரின் கவனத்திற்கு சென்றுள்ளது. மேலும் இதை ஒரு முக்கிய சம்பவமாக எடுத்துக் கொண்டுள்ள அவர், “இதை நாங்கள் விசாரித்து சோதனை செய்கிறோம் என்று அந்த யூசரின் ட்வீட்டிற்கு பதில் அளித்துள்ளார்.