பாடசாலை மாணவர்களின் பேருந்து பருவகாலச் சீட்டுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய ஆலோசனைகளை உள்ளடக்கிய விசேட அமைச்சரவைப் பத்திரம், அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போதைய நிவாரண உதவியில் மாற்றத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக புதிய அமைச்சரவை பத்திரம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டு நிவாரணம் வழங்கும் முறைமையை மாற்றியமைப்பது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய குழுவொன்றை நியமித்த நிதி அமைச்சு அக்குழுவினூடாக பெற்றுக்கொண்ட பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏனைய பிரேரணைகள் உட்பட புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.