Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது!

2 years ago
in செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (10) முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும்,கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக இன்றைய தினம் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1350 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில்,மீகுதி 350 ரூபாயும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கெடுக்க ஒத்துழைப்பு வழங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்க பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொழும்பில், இன்று சம்பள நிர்ணய சபையுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் முடிவிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளம் என மார்தட்டிக்கொண்ட, அதாவது 1350 அடிப்படை சம்பளமும், 350 ரூபாய் ஊக்குவிப்பு தொகையும் வழங்கப்படும் என கூறிய அரசாங்கத்துக்கு இது ஒரு பின்னடைவான முடிவு அல்லவா? என ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதம சட்ட ஆலோசகர் கா. மாரிமுத்து, ”இது வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு சம்பள நிர்ணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும்.

தோட்ட தொழிலார்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த அம்சம் இன்று முதல் நடைமுறையாகும். மேலும் இது தொடர்பிலான வர்த்தமானி விரைவில் வெளிவரும்.” என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
அழிக்க கொண்டுசென்ற மதுபான போத்தல்களை அள்ளிக்கொண்டு சென்ற குடிமகன்கள்!

அழிக்க கொண்டுசென்ற மதுபான போத்தல்களை அள்ளிக்கொண்டு சென்ற குடிமகன்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு