முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியினால் இந்த கொலை சதி முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸக குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற போது திஸ்ஸ குட்டியாரச்சி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அவரது பாதுகாப்பு என்பனவற்றை இல்லாமல் செய்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சதித் திட்டத்தின் உண்மை நிலையை அம்பலப்படுத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்கவிடம் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.