ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.