அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட வெளியேறும் பகுதிக்கு அருகில் நேற்று (15) நிலத்தடி மின் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இரவு கடமையில் ஈடுபட்டிருந்த நடமாடும் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 14 அடி நீளமுள்ள இரண்டு செப்பு கேபிள்கள் மற்றும் கேபிள்களை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் வனவாசல களனி பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுகிறது.
வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.