Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கருணா அம்மான் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ள அக்கட்சியின் முன்னாள் உபதலைவர்!

கருணா அம்மான் மீது குற்றச்சாட்டு முன்வைத்துள்ள அக்கட்சியின் முன்னாள் உபதலைவர்!

8 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி ஊழல் நிறைந்தது என கட்சியிலிருந்து வெளியேறிய தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் முன்னாள் உப தலைவரும், அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் பயணத்தில் முக்கியமான ஒரு முடிவை அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் பதவியில் இருந்தும் அக் கட்சியின் அடிப்படை உரிமை பதவியில் இருந்தும் கடந்த 17.08.2024 அன்று விடுவித்து கொண்டுள்ளேன்.

அக் கட்சியில் நீண்ட தூரம் என்னால் பயணிக்க முடியாது என்பதனை புரிந்து கொண்டேன்.

போரினால் பாதிக்கப்பட்டு தமது அன்றாட வாழ்க்கைக்கு மற்றையவர்களிடம் கையேந்தும் நிலமைக்கு தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் பொருளாதாரம், மேம்பாடு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது என்பவற்றை கருத்தில் கொண்டு ஆரம்பித்த பயணம் இன்று பல கோடிக்கணக்கான பணத்தை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அங்கே நிதி மோசடிகளும், ஊழல்களும் வீண்விரயங்களும் செய்யப்பட்டு நிதிகள் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த அக்கட்சியில் இருந்து என்னால் எனது பயணத்தை தொடர முடியாது இருப்பதாலேயே இம் முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.

நிதிமோசடிக்கு அந்த கட்சியின் தலைவர் கருணா அம்மானும் அவரினை சுற்றியிருக்கும் சமூகவிரோத கும்பல்களும் முழுப்பொறுப்பு கூறவேண்டும் .

ஒரு கட்சியினை எப்படி வழிநடத்த வேண்டும் என தெரியாமல் மிலேச்சத்தனமான போக்கில் செயற்பட்டு கொண்டிருக்கும்போது ஜனநாயக பாதையில் மக்களின் தேவையை, மக்களின் அன்றாட வாழ்கைக்கு எப்படி உதவுவது என்பதனை புரிந்து கொள்ள தெரியாத நிலையில் ஒருவட்டத்திற்குள் என்னால் செயற்படமுடியாது.

எனக்கு பலபக்கங்களிலும் இருந்து நிறைய அழுத்தங்கள் , அச்சுறுத்தல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இருப்பினும் எனது மக்கள் சேவை அன்பின் இல்லம் அறக்கட்டளை சேவை மூலமும், என்னால் ஆரம்பிக்கப்பட்ட அம்மான் படையணி மூலமும் தொடரும்.

இதுவரை நான் எவரிடமும் எனது அன்பில் இல்லத்திற்கோ, அம்மான் படையணிக்கோ ஒரு சதம் கூட கேட்கவும் இல்லை. பெறவும் இல்லை.

முழுநிதியும் என்னுடைய சொந்த உழைப்பில் எனது கையால் செலவிடப்பட்டது.

இருப்பினும் எனது பயணத்தினை இடைநிறுத்தி கொள்வேன் என யாரும் கனவு காணவேண்டாம்.

இழப்புகள் என்பது எனக்கு புதிதல்ல பல துரோகங்களை நான் சந்தித்திருக்கின்றேன்.

இன்றும் பாரிய துரோகம் முதுகில் குத்தும் செயலை சந்தித்திருக்கின்றேன். செய்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

எனது அன்பின் இல்லம் அறக்கட்டளை, அம்மான் படையணியுடன் இணைந்து இன்றில் இருந்து எனது சேவையை ஆரம்பிக்கும் . குறிப்பாக வடக்கு கிழக்கில் அது தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதை உறுதிபட கூறுகின்றேன்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எனது இரு அமைப்புக்களும் அதனை சார்ந்த மக்களும் எமது தமிழர் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக சமூதாயத்துடன் இணைந்து ஓட வேண்டும். மற்றையபடி விருப்பு வாக்கின்படி ஒரு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்தால் நன்றாக இருக்கும். அதேநேரம் எமது தமிழ் இருப்பை ஒற்றுமையாக காட்டவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களுடன் சமுதாயத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Tags: BattinaathamnewselectionSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்
செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார தீர்வுகளை துரிதப்படுத்துமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

May 17, 2025
குறுந்தூர ரயில் சேவைகள் மட்டுமே இன்று இயக்கப்படும்; ரயில்வே முகாமையாளர்
செய்திகள்

குறுந்தூர ரயில் சேவைகள் மட்டுமே இன்று இயக்கப்படும்; ரயில்வே முகாமையாளர்

May 17, 2025
யாழில் கடை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது
செய்திகள்

யாழில் கடை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது

May 17, 2025
உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
செய்திகள்

உலகில் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீரராக முதல் இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

May 17, 2025
மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று
செய்திகள்

மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று

May 17, 2025
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்
அரசியல்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் சுமந்திரன்

May 17, 2025
Next Post
நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி வரும் குற்றவாளிகள்!

நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி வரும் குற்றவாளிகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.