வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கை இன்று காலை 7 மணியளவில் ஆரம்பமாகியது.
காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய மாலை 4 மணி வரை வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசை அல்லது வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி தேர்தலுக்கான நேர எல்லை திருத்தப்பட்டுள்ளது.