ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பாதுகாப்பு நிதி உட்பட முக்கிய அமைச்சுகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு, நிதி, முதலீட்டு ஊக்குவிப்பு, கொள்கை உருவாக்கம், திட்டமிடல், சுற்றுலா, எரிசக்தி, விவசாயம், காணி, கால்நடைகள், நீர்வழங்கல், கடற்றொழில் ஆகிய அமைச்சுகளை ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் பொதுசன ஊடக அமைச்சு, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சு, சுற்றாடல், வனஜீவராசிகள், வனவளங்கள், நீர்வழங்கல், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு, கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் கட்டுமானத்துறை ஆகிய அமைச்சுகளின் பொறுப்பு அமைச்சர் விஜித ஹேரத் பொறுப்பேற்றுள்ளார்.