மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கருணை கொலை செய்துள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 90 வயதான பனையேறும் தொழிலாளி சந்திரபோஸ் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் தனியாக வசித்து வந்தனர்.
இத்தம்பதிகளுக்கு 3 மகன், 3 மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் என அனைவரும் தனித்தனியே வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மாதத்திற்கு ஒரு பிள்ளை என தினமும் 3 வேளையும் மகன்கள் உணவு வழங்கி வந்துள்ளனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வயது முதிர்வால் படுத்த படுக்கையான மனைவியை 3 வருடங்களாக கணவன் சந்திரபோஸ் தான் பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணவனுக்கும் கண் பார்வை தெரியாமல் போனதாலும் வயது முதிர்வின் காரணமாலும் சந்திரபோஸால் மனைவியை கவனித்துக் கொள்ள முடியாமல் போனது.
இதனால் படுத்த படுக்கையாக இருந்த மனைவி லட்சுமிக்கு உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவெல்லாம் தூங்க முடியாமல் கதறித்துடித்துள்ளார்.
இதனைக் கண்டு துன்பப்பட்ட கணவன் மனைவி லட்சுமியை கருணைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்றுக் காலை கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வாசலில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்த போது உணவுக் கொடுக்க வந்த மகன் தந்தை வாசிலில் அழுதபடி இருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது தாய் லட்சுமி கழுந்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடத்துள்ளார்.
இச்சம்பவத்தை அறித்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு உடற் கூராய்வு பரிசோதனைக்காக வைத்தியாசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், மனைவியை கொலை செய்த கணவனை வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சைக்காக அரச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வயதான பெற்றோரை உடனிருந்து பெற்ற பிள்ளைகள் கவனிக்காதமையினாலேயே இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.