புதிய பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட டிபெண்டர் வகை ஜீப் இன்று (25) அதிகாலை வெலிக்கடை பாராளுமன்ற வீதியில் ஜயந்திபுர பிரதான நுழைவாயிலுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் கவிழ்ந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடந்த போது, பாதுகாப்பு செயலாளர் எச். எஸ். எஸ். துய்யகொந்தா அந்த காரில் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளரை அமைச்சிலிருந்து அழைத்து வருவதற்காக பொல்துவ நோக்கிச் சென்ற போது பிரதான நுழைவாயிலின் இடது பக்கமாக உள்ள பாராளுமன்ற பிரதான நுழைவாயில் சதுப்பு நிலத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.