மனித தேவைகளுக்கு ஏற்ப உலகளவில் பல புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளது.
அந்தவகையில், குடிநீருக்கான மக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை சேமிப்பதற்கும், சிக்கனமாக பயன்படுத்தவும் பல முயற்சிகள் உலகளவில் எடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில், சிறுநீர் மற்றும் வியர்வையை குடிநீராக மாற்றி புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை குடிநீராக மாற்றி நாசா புதிய சாதனை படைத்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சராசரியாக ஒரு நபருக்கு மூன்று லீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
அதற்கு ஏற்ப போதிய தண்ணீர் வழங்குவதில் சிக்கல் காணப்பட்டதால், இதனை சரி செய்ய நாசா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை உள்ளிட்ட கழிவுகளை குடிநீராக மாற்றும் பணியில் நாசா விஞ்ஞானிகள் வெற்றியடைந்துள்ளனர்.