மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் பதவியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதிக்கு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும், நல்லாட்சி யுகத்தை ஏற்படுத்துவதற்கும், தண்டனையில்லா கலாசாரத்தை மாற்றுவதற்கும், இலங்கை மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என தாங்கள் நம்புவதாகவும், சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இனம், மதம் மற்றும் பிற பிளவுபடுத்தும் அடையாளங்கள் பல ஆண்டுகளாக இலங்கை தாய்நாட்டை பாதிக்கின்றன.
இந்தநிலையில் இன வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படும் ஐக்கிய இலங்கைக்கான அடித்தளத்தை ஜனாதிபதி அமைப்பார் என நம்புவதாக சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.