கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ்.ருவன்சந்திர ஜப்பானிய கடன் உதவியில் இந்த முனையம் நிர்மாணிக்கப்படும் என குறிப்பிட்டார்.
இந்த முனையத்தை 2019-ம் ஆண்டு கட்ட திட்டமிடப்பட்டிருந்தாலும், பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் தடைபட்டன.
புதிய பயணிகள் முனையத்தில் வருடாந்தம் 9 மில்லியன் பயணிகளுக்கு இடமளிக்க முடியும் என செயலாளர் தெரிவித்தார்.
தற்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் முதலாவது பயணிகள் முனையத்தில் வருடாந்தம் 6 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்.