கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் கடமையாற்றிவரும் விசேட பொலிஸ் புலனாய்வாளர்கள் இருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் வியாபாரியிமிருந்து 2000 ரூபாய் இலஞ்சமாக பெற முயன்ற போது, கொழும்பிலிருந்து வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (25) இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பண் சேனை , சிலுக்குடியாறு பகுதியில் மணல் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களிடம் வாரத்திற்கு ஒருமுறை இலஞ்சம் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இன்றையதினம் கொக்கட்டிச்சோலை நகரில் வைத்து இலஞ்சம் வாக்கும் போது, அங்கு மாறுவேடத்திலிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை நாளைய தினம் (26) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக கொழுப்பு நீதிமன்றுக்கு கொண்டுசெல்லவுள்ளனர்.