2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.
387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகள் வெளியானதும் doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.