பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஓய்வூதியத்தை இழந்த எண்பத்தைந்து எம்.பி.க்களில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி எம்.பி.க்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஓய்வூதியம் 45,000 ரூபாவாகும்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு முடிவடையவிருந்த பாராளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ளதால் மேற்படி எம்.பி.க்கள் அந்த சிறப்புரிமையை இழந்துள்ளார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஒன்பதாவது பாராளுமன்றம் ஆகஸ்ட் 20, 2020 அன்று தொடங்கியதன்படி, பாராளுமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.