வாகனங்களை காட்டி மக்களை ஏமாற்றி அந்த வாகனங்களை ஏலம் விட்டு திறைசேரிக்கு பணத்தை எடுத்துச்செல்லுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தை சுற்றி ஆடம்பர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கோரிக்கையை நேற்று (26) முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வாகனங்களை காட்டுவதன் மூலம் அவர்கள் ஒரு சிறிய மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன். 2015ம் ஆண்டு ஜோன் அமரதுங்க காலிமுகத்திடலில் கார் ஷோ நடத்தியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வாகனங்களை அமைச்சர்கள், எம்.பி.க்கள் பயன்படுத்தவில்லை. இந்த வாகனங்களை பொதுப்பணித்துறையினர் மற்றும் அரச அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வாகனங்களை ஏலமிட்டு பணத்தை திறைசேரிக்கு எடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் இந்த வாகனங்களை ஏலமிட்டு அரச அதிகாரிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.