ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துவரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் முதல் 172 மதுபான அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனூடாக, சுமார் 220 கோடி ரூபா வருமானம் ஈட்ட முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.
இதேவேளை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் தெரிவித்துள்ளார்.