யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிசார் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
மேலும், யுக்திய விசேட நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சரிசெய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய பணிகளில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்துவதன் மூலம், அவர்கள் எதிர்காலத்தில் அதிக திறனுடன் செயல்படுவார்கள் என நம்புவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் அதிகாரிகளின் பற்றாக்குறை தற்போது காணப்படுவதாகவும், அந்த பற்றாக்குறைக்கு மாற்று தீர்வாக, இதுவரை ஏனைய பணிகளில் அமர்த்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டு பொதுப்பணியின், குறிப்பாக குற்றச்செயல்களை தடுக்கும் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.