கடுமையான நிதி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வங்கிகள் வழங்கும் கடவுச்சொற்களை (OTP) எந்த சூழ்நிலையிலும் யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.
நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள பல்வேறு பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் மக்களுக்குத் தெரிவிக்கும் போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
வங்கிகளினால் வழங்கப்படும் கடவுச்சொற்களைப் பயன்படுத்தி இவ்வாறான பாரிய நிதி மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எக்காரணம் கொண்டும் வங்கிகள் வழங்கும் OTP கடவுச்சொற்களை எவருக்கும் பகிர வேண்டாம் என காவல்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.