Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
T.N.A என்ற பெயரை பயன்படுத்த தடை; தேர்தல்கள் ஆணைக்குழு திட்டவட்டம்!

T.N.A என்ற பெயரை பயன்படுத்த தடை; தேர்தல்கள் ஆணைக்குழு திட்டவட்டம்!

3 years ago
in செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை கைப்பற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி எடுத்த முயற்சிக்கு இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு மறுப்புத் தெரிவித்துள்ளது.

ஆர்.ராகவனை செயலாளராக் கொண்டு பதிவு செய்யப்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெயரில் உள்ள ஜனநாயகத்தை நீக்கி தமிழ்த் தேசியக் கூட்டணி என மட்டும் செயல்படவும் அதனை ஆங்கிலத்தில் T.N.A என உச்சரிக்கவும் தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு எழுத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பத்தை 2023 மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக் குழுவின் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

இதே பெயரில் வேறு கட்சி நீண்ட காலமாக இயங்குவதனால் இந்த சொல்லாடல் இடம்பெறும் வகையிலான பெயரிற்கு அனுமதிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்து குறித்த கட்சிக்கு தற்போது எழுத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் தற்போது 5 கட்சிகள் கூட்டாக இயங்குவதோடு 5 கட்சிகளின் தலைவர்களும் இணைத் தலைவர்களாக இயங்கும் நிலையில் ரி.என்.ஏ ஆரம்பிக்கும்போது இருந்த 5 கட்சிகளில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இரு கட்சிகளும் இந்த கூட்டணியில் இருப்பதனால் அந்தப் பெயர் தமக்கே சொந்தம் என கூறிவந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.

இதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அனைவரும் இணங்கி தமிழ் அரசுக் கட்சியின் பெயரில் பயன்படுத்தவே ஒப்புதல் வழங்கியதனால் அந்தக் கட்சியின் சின்னத்திற்கே இப் பெயரை பயன்படுத்த முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு பதிலளித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் அரசுக் கட்சி வெளியேறி விட்டதாக ரெலோவும், புளொட்டும் அறிவித்து தம்முடன் ஈ.பி.ஆர்எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு தாமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என கூறினர்.

இதற்கமையே இக் கட்சியினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு
செய்திகள்

அநுரவுக்கு சூனியம் வைத்த தேரர்கள்?; கொழும்பில் நடந்த விசேட சடங்கு

October 21, 2026
இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி
அரசியல்

இறக்காமம் நீதிமன்றப் பிரச்சினை; பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பும் உதுமாலெப்பை எம்.பி

October 21, 2026
தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!
செய்திகள்

தபால் ஊழியர் கைது; வீட்டில் மூன்று ஆண்டுகளாகத் தேங்கியிருந்த கடிதங்கள் மீட்பு!

October 21, 2026
பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!
செய்திகள்

பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!

October 21, 2026
படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்
செய்திகள்

படுகொலை செய்யப்பட்டு 26 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிமலராஜன் வடக்கில் நினைவுகூரப்பட்டார்

October 21, 2026
Next Post
நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்; 13ம் உள்ளடக்கம்!

நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்; 13ம் உள்ளடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு