Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்; 13ம் உள்ளடக்கம்!

நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்; 13ம் உள்ளடக்கம்!

3 years ago
in செய்திகள்

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இந்த வார இறுதிக்குள் அனுப்புவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி தமிழ் மக்கள் கூட்டணி உள்ளிட்ட தரப்புகளுடனும் கூட்டிணைந்து
இந்தக் கடிதத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக எதிர் வரும் 21ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தி யோகபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தக் கடிதத்தில் தமிழர்களின் தேசிய பிரச்னை மற்றும் அன்றாட பிரச்னைகளை மையப்படுத்தி அவற்றை
தீர்ப்பதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசமைப்பில் காணப்படுகின்ற 13ஆவது திருத்தச்
சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்தவில்லை. அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்ற விடயங்களும் சுட்டிக்காட்டப்படவுள்ளன.

இதேபோன்று பௌத்த மதத்தின் பெயராலும் தொல்பொருட்களின் பெயராலும் வடக்கு கிழக்கு பகுதிகளில்
பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் மற்றும் ஏனைய வரலாற்றுப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை குறித்தும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருக்கான கடிதத்தின் வரைவு பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிததத்தின் இறுதி அம்சம் இந்த வாரத்துக்குள் இறுதி செய்யப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
Next Post
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்ப தயாராகிறது; 13ஆவது திருத்தம் வேண்டாம் எனக் கூறவுள்ளதாம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்ப தயாராகிறது; 13ஆவது திருத்தம் வேண்டாம் எனக் கூறவுள்ளதாம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு