தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திர காந்தன் (பிள்ளையான்) தொடர்பான முக நூல் பதிவொன்று வைரலாகி வருகின்றது. அப்பதிவில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிள்ளையானுக்கு பார் லைசன்ஸ் மட்டுமல்ல சாராய தொழிற்சாலை மற்றும் சாராய ஏஜெண்டுக்களும் உள்ளன என்பது கிழக்கு மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரியும்.
பிள்ளையானுடைய ஆணிவேர் TMVP கட்சியின் பொருளாதார பணிமனை மேம்பாட்டு செயலாளர் சந்திவெளியில் இருக்கின்ற பார் கார பாலகிருஷ்ணன் என்பது நமக்கு தெரியாமல் இல்லை. காரணம் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது பிள்ளைகளின் பெயர்களில் உள்ள அனைத்து பார்களும் பிள்ளையானுக்கு சொந்தமானவை. அதை நடத்துகின்ற பினாமிதான் பாலகிருஷ்ணன் என்பதும் எமக்கு தெரியாமல் இல்லை.
அதுபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பார் லைசன்ஸ் ஊடாக கோடிக்கணக்கில் காசு உழைப்பதற்கென்று இரண்டு பேரை பிள்ளையான் அமர்த்திருக்கின்றார். ஒன்று பார்க்கார லலித், மற்றைய பார்காரர் கவாஸ்கர்.
அது போன்று மட்டக்களப்பு நீதி மன்றத்திற்கு அருகில் உள்ள சிங்கிங் ஃபிஷ் (sinking fish) எனப்படுகின்ற அரசாங்கத்துக்கு சொந்தமான கவர்னர் பங்களா கூட பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவரது தம்பி சுகுணன் பெயரில் நீண்டகால குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு இன்று வரை sinking fish பார் ஆகவும் DCSL சாராய ஏகபோக விநியோகஸ்தராகாவும் பதிவு செய்யபட்டு சின்ன கண்ணா எனப்படும் பினாமி மூலம் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் மூலம் பிள்ளையானுக்கு பல கோடி ரூபாய்கள் வருமானம் கிடைக்கின்றது. அது மட்டும் அல்ல அதற்கு ஊடாகவே இன்னும் பல சாராய ஏஜெண்டுகளும் எடுத்து நடத்தப்படுகின்றது.
இவை அனைத்தும் பிள்ளையான் முதலமைச்சராகவும் பின்னர் ஜனாதிபதி ஆலோசகராகவும் இருந்தபோது முன்னெடுக்கப்பட்ட நடைமுறைகள். பின்னர் பிள்ளையான் சிறை சென்ற பின் இவற்றில் இருந்து வந்த வருமானம் மூலம் தான் TMVP கட்சி மற்றும் பிள்ளையானின் வழக்கு செலவு, குடும்ப செலவு என அனைத்தும் தங்கு தடையின்றி நடந்தேறியது.
பின்னர் சிறை மீண்ட பிள்ளையான் கும்பல் சாராய கடையில் இருந்து ஒருபடி மேலே சென்று தற்போது சாராய company நடாத்தும் அளவிற்கு சென்று விட்டது. கல்குடாவில் அமைந்திருக்கின்ற மெண்டிஸ் சாராய உற்பத்தி நிலையமானது கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் அமைக்க முற்பட்ட போது அது அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டத்தின் ஊடாக தடுத்து நிறுத்தபட்டது. பின்னர் பிள்ளையான் சிறை மீண்டு வந்ததன் பின் அவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டு தனக்கு 20 சதவீத கமிஷன் தந்தால் அதனை இயக்க அனைத்து அனுமதிகளையும் பெற்று தருவதாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு சரமாரியாக உற்பத்திகள் இடம்பெற்று மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமன்றி இலங்கை பூராகவும் சாராய விநியோகம் இடம் பெறுகின்றது.
இதற்கான அனைத்து டீல்களையும் முன்னெடுத்த பார்கார லலித் மற்றும் மற்றும் மட்டக்களப்பு vision pharmacy புதிய முதலாளி தம்பி கொண்டை கிஷோர் போன்றவர்கள் கிஷோரின் தந்தை பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மெண்டிஸ் சாராய விநியோக ஏகபோக அனுமதியை பெற்றுள்ளனர். இதிலும் பிள்ளையானுக்கு commission மாதா மாதம் செல்கின்றது.
இவற்றையும் இவை போன்ற பல சட்டவிரோத வியாபாரங்களையும் காப்பாற்றவே பிள்ளையான் இந்த TMVP எனப்படும் அரசியல் கட்சியை நடாத்துகின்றார். அதற்காக தேவையுடைய ஒரு சமூகத்தினை பிழையாக வழிநடாத்தி செல்கின்றார். தற்போது அதன் மூலமும் மாதாந்தம் பல இலட்சங்களை உழைக்கின்றார் என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை.
இதுமட்டுமல்ல இவரது இல்மனைட் தொழிற்சாலை மற்றும் மண்மாபியா போன்ற அனைத்து கொள்ளைகளும் அடுத்தடுத்த பதிவுகளில் வெளிவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.