Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா!

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு பாசிக்குடா வீதி கல்குடாவில் சனிக்கிழமை (05)திகதி இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய வளமான நாடாக இந்த நாட்டை உருவாக்குவதற்கு அரச ஊழியர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் முன்வரவேண்டும்’ என்று தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

தேர்தலுக்கு பின்னரான வன்முறையற்ற, அமைதியான செயற்பாடாக இந்த தேர்தல் காணப்பட்டது. இது உங்களினதும் எங்களினதும் முழுமையான ஒத்துழைப்பு மூலமாகவே இது காணப்பட்டது. ஆகவே அமைதியான தேர்தலுக்கு பின்னரான செயற்பாட்டிற்கு உதவி புரிந்த அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் எதிர்பார்ப்பது எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறும் போது அரச உத்தியோகத்தர்களாகிய உங்களது ஒத்துழைப்பு அவசியம் என கருதுகின்றேன். நான் கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் போது உங்களால் எனது கடமைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு கிடைத்தது. இதேபோன்று 2008,2009 காலப்பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றினேன்.

இதன்போது 2017 ஆம் ஆண்டு கல்குடா பொலிஸ் நிலைய கட்டடம் அமைப்பதற்கு பொலிஸ் பிரிவிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2020,2021 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ் நிலையத்தை அமைப்பதற்கு போதியளவு நிதி வசதி கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் அப்போதைய காலகட்டத்தில் இருந்த பொலிஸ்மா அதிபருடன் இணைந்து நாங்கள் இந்த கட்டடத்தை அமைப்பதற்கு முழு மூச்சாக செயற்பட்டோம். அதன் நிறைவாகவே இவ் பொலிஸ் நிலையத்தை நிர்மானித்தோம்.

இந்த நிலையத்தில் நிறைவான வசதிகள் இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் மேலும் முற்றும் முழுதான வசதிகளுடன் நிறைந்த நிலையமாக மாற்ற எதிர்பார்க்கின்றோம்.

மேலும் உங்களிடம் எதிர்பார்ப்பது அமைதியையும் சட்டத்தையும் மதித்து நீங்கள் செயற்படுவீர்களாயின் பொலிஸ் திணைக்கள உறுப்பினர்களாகிய நாங்கள் சினேகபூர்வமாக இணைந்து செயற்படுவோம். பாசிக்குடா எனும் வலயமானது சுற்றுலா பிரதேசமாக காணப்படுகிறது. அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகின்றனர்.

அவர்களுடைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நாளாந்த செயற்பாடுகளையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் உறுதி செய்வதற்கு நாங்கள் முழு மூச்சாக செயற்படுவோம். பொலிசார் மீது நம்பிக்கை கொள்வீர்களாயின் உங்களது சமூகத்தில் வன்முறையற்ற ஒரு சமூதாயத்தை உருவாக்கி கொள்ளமுடியும் என்றார்.

இவ் பொலிஸ் நிலையமானது 608 ஆவது பொலிஸ் நிலையமாகும். இன்றை நிகழ்வில் கிழக்கு மாகான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித்ரோகன உட்பட இராணுவ, கடற்படை உயர் அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவ் நிலையமானது கடந்த காலத்தில் கும்புறுமூலை கல்குடா வீதியில் அமைந்திருந்தது. பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அவ் நிலையம் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் தாக்கப்பட்டு அங்கிருந்த பொலிஸ் உத்தியோக்கத்தர்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்டனர். அதன் பிறகு பாசிக்குடா வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு பல உயிர் சேதங்கள ஏற்பட்டிருந்தது. அத்துடன் சுனாமி கடற்கோள் அனர்த்தத்திலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது இவ் நிலையம் புதுப் பொலிவுடன் நிர்மானிக்கப்பட்ட புதிய கட்டத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியானது!

பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள் வெளியானது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.