அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிற உலக வல்லரசுகளை இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இஸ்ரேல் காஸா பகுதியில் குண்டுவீசத் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது என்பதையும், லெபனா மீது ஹெஸ்புல்லா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையும் கருத்தில் கொண்டு பிரான்ஸ் ஜனாதிபதி சக மேற்கத்திய நாடுகளிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
“இஸ்ரேலுக்கு எதிரிகளை வீழ்த்துவதற்கு உரிமை உண்டு என்பது உண்மைதான். ஆனால் அப்பாவி மக்கள் இறக்கிறார்கள். காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கப்படக் கூடாது” என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.