Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை என தமிழரசு கட்சி தகவல்!

மாவையின் பதவி விலகல் கடிதம் கிடைக்கவில்லை என தமிழரசு கட்சி தகவல்!

8 months ago
in அரசியல், செய்திகள்

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனையவர்களின் பதவி விலகல் கடிதங்கள் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை என கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் விடயங்களை கையாள்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் நேற்று (09) கூடியது.

குறித்த கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வன்னியின் மூன்று மாவட்டத்தினதும் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளை (10) காலை இறுதி விபரம் அறிவிக்கப்படும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதம் எவையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை.

அதுபோலவே சசிகலா மற்றும் தவராசா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறியதாக ஊடகத்தின் வாயிலாகவே அறியமுடிகின்றது.

அவர்களது கடிதமும் இதுவரை கிடைக்கவில்லை பத்திரிகைகள் ஊடாக கடிதம் அனுப்பபட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

எனவே இது தொடர்பாக நான் கருத்து கூற முடியாது அவ்வாறான நிலமை ஏற்படுமாக இருந்தால் கட்சியின் யாப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுப்போம்.

அத்துடன் இதுவரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்களில் மாற்றம் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை கட்சியின் மத்திய குழுவே தேர்தல் நியமனக்குழுவை நியமித்தது.

அந்த குழுவானது எவ்வாறான அடிப்படையில் வேட்பாளர்களை தெரிய வேண்டும் என்று தீர்மானம் எடுத்ததோ அந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியிருக்கிறது.

இம்முறை தேர்தலில் புதியவர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்வாங்கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த அனைவருக்கும் கொடுக்கமுடியாத துர்பாக்கிய நிலமை எமக்கு உள்ளது.

அத்துடன் இம்முறை தேர்தலில் கொழும்பில் போட்டி இடுவது தொடர்பாகவும் மத்தியகுழுவில் கதைக்கப்பட்டது தற்போதைய களநிலவரங்களின் அடிப்படையில் அங்குள்ள ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஆராய்ந்துள்ளோம்.

அந்த அடிப்படையில் கொழும்பில் இம்முறை தமிழரசுக்கட்சி போட்டியிடாது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில் போட்டியிடும் சசிகலா ரவிராஜ் தமிழரசுக்கட்சியில் இருந்து முற்றாக வெளியேறாமல் இருக்கும் பட்சத்தில் கட்சியின் யாப்பிற்கமைய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Battinaathamnewspoliticalnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி
செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் வேன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

June 7, 2025
ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்
செய்திகள்

ஆறு தொன் தங்கமும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிரப்பட வேண்டும்; சபா குகதாஸ்

June 7, 2025
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்
செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையை கடவத்தையுடன் இணைக்கும் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் மாதம் ஆரம்பம்

June 7, 2025
ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்
செய்திகள்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஓட்டமாவடி மைதானத்தில் இடம் பெற்ற பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும்

June 7, 2025
நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்
செய்திகள்

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு கைவிடப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்

June 7, 2025
ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு
செய்திகள்

ஊழல் மற்றும் சட்டவிரோத செல்வம் தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கோவில், விகாரைகளுக்கு படையெடுப்பு

June 7, 2025
Next Post
இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நாவில் நிறைவேற்றம்!

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்பின்றி ஐ. நாவில் நிறைவேற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு