Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜே.வி.பியை பற்றி தெரியாதவர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறோம்!

ஜே.வி.பியை பற்றி தெரியாதவர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறோம்!

2 years ago
in அரசியல், செய்திகள்

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஜெனீவா தீர்மானத்தை (A/HRC/57/L.1) ஜேவிபி அரசாங்கம் நிராகரித்தது குறித்து சிலர் சங்கடப்படுகின்றார்கள்.

திரு. அனுர குமார திசாநாயக்க, திரு டில்வின் சில்வா, திரு விமல் ரத்நாயக்க போன்ற ஜேவிபி தலைவர்கள் இனவாதமற்றவர்கள் என நம்பும் இது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஜேவிபி சிங்கள பௌத்த மேலாண்மை கருத்தியலை பகிர்ந்து கொள்ளும் அமைப்பு என்பதை புரிந்து கொள்ளுபவர்களுக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமே இல்லை.

உண்மையில் ராஜபக்சே குடும்பத்தின் வெற்றியில் சக பிரயாணிகளாக ஜேவிபி இருந்தது.
அதே போல ஜேவிபி யுத்த வெற்றி வாதத்திற்கு எதிரானவர்களும் அல்ல இதனால் தான் முப்படைக்கான சலுகைகளை குறைக்க மாட்டோம் என இப்போதும் ஜேவிபி வெளிப்படையாக பேசுகின்றது, போர்குற்றவாளிகளை தண்டிக்க மாட்டோம் என்கின்றது.

நல்லாட்சி காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கைக்கு தாம் வழங்கிய பதிலில் (Appendix 1) மாகாண ஆளுநரின் அதிகாரம் குறைக்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டை ஜேவிபி சார்பில் அனுர குமார திசாநாயக்க, திரு விமல் ரத்நாயக்க ஆகியோர் எடுத்தனர் .

இது தவிர இதே ஜேவிபி திரு சுனில் ஹந்துநெத்தி மூலம் சுனாமி பொது கட்டமைப்பை (P-TOMS) நீதிமன்றில் நீர்த்து போக செய்திருந்தது.

இந்த சுனாமி நிர்வாகக் கட்டமைப்பானது எந்தவிதமான அரசியல் அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை.
அத்துடன் அதற்கு உருப்படியான நிர்வாக வலுவும் இருக்கவில்லை. மிகவும் வரையறுக்கப்பட்ட செயற்பாடுகளைக் கொண்ட ஒரு தற்காலிக ஒழுங்கமைப்பையே ஜேவிபி நிராகரித்திருந்தது.

பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்கள் கூட University of Edinburgh இல் சமர்ப்பித்த தனது PhD Dissertation இல் தெளிவாக “The party which managed two ideo-political currents of Marxism and Sinhala nationalism most adroitly was the JVP” என பதிவு செய்துள்ளார் .

ஆகவே ஜேவிபி தமிழர்களின் பிரச்சனைகளை நேர்மையாக ஒருபோதும் அணுகாது.
இந்த அரசியல் உண்மைகளில் நாங்கள் தெளிவாக இருந்தால் தேவையற்ற ஏமாற்றங்களை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வராது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
Next Post
சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்!

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு புதிய தலைவர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு