சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதைப் பொருளற்ற எதிர்கால சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்து மகஜர் ஒன்றினை கையளிப்பதற்காக காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி துவிச்சக்கர வண்டி பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது,
குறித்த பயணம் கடந்த 07ம் திகதி பயணத்தை முன்னெடுத்த காத்தான்குடியைச் சேர்ந்த தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி பாத்திமா நதா இன்று (11) வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கொழும்பை சென்றடைந்துள்ளார்.
காத்தான்குடியிருந்து சுமார் 322 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து கொழும்பை ஏழுநாட்களுக்குள் சென்றடைவதாக இலக்கு வைத்து பயணத்தை ஆரம்பித்த இளம் சகோதரி பாத்திமா நதா அவரின் முயற்சியினாலும் ஏனையவர்களின் ஊக்குவிப்பினூடாகவும் ஐந்து தினங்களில் கொழும்பை சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.