வியாழேந்திரன் சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மதியம் 12 மணியளவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் அதனடிப்படையில் பல்வேறு கட்சிகள் வேட்புமனுக்களை அவசர அவசரமாக தாக்கல் செய்ய வந்திருந்தது.
இந்த நிலையில் வியாழேந்திரன் இன்று சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆவணங்களில் சில குறைபாடுகள் காணப்பட்டதினாலேயே குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
அதேசமயம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நேரம் முடிவடைந்துள்ளதனால் இம்முறை வியாழேந்திரனின் பாராளுமன்ற ஆசனம் பறிபோயுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.