நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையுடன் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த வருட காலப்பகுதியில் 40,657 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் மீண்டும் அதிகரிக்க கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.